காவல் நிலையம் முன் டிக் டாக் வீடியோ...! எப்.ஐ.ஆர் போட்ட போலீசார்

விளையாட்டுத் தனமாக சிறுத்தை பட காமெடியை காவல் நிலைய வாசலில் இருந்து டிக் டாக் டப்மாஸ் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

news18
Updated: January 11, 2019, 7:53 AM IST
காவல் நிலையம் முன் டிக் டாக் வீடியோ...! எப்.ஐ.ஆர் போட்ட போலீசார்
காவல் நிலையத்தில் டிக் டாக் செய்த இலைஞர்கள்
news18
Updated: January 11, 2019, 7:53 AM IST
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விளையாட்டாக டிக் டாக் செய்த இளைஞர்கள் தற்போது வழக்கில் சிக்கியுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்யும் அளவிற்கு என்ன செய்தார்கள் என்பதை பார்ப்போம்.

சிறுத்தை படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் சீருடையில் வில்லன் வீட்டுக்குள் நுழையும் போது, “இந்த வீட்டுக்கெல்லாம் இடது கால் வச்சுதான் உள்ளே போகனும்” என்று வசனம் பேசும் ஒரு காட்சி வரும்.

இந்த காட்சியை போலீஸ் ஸ்டேசன் முன், டிக் டாக் செயலி மூலம் டப்மாஸ் செய்த இளைஞர்கள் 4 பேர் மீதுதான் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


துலுக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன், தங்கேஸ்வரன், முருகேசன், குருமதன் ஆகியோர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்திற்கு வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது விளையாட்டுத் தனமாக சிறுத்தை பட காமெடியை காவல் நிலைய வாசலில் இருந்து டிக் டாக் டப்மாஸ் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், இளைஞர்கள் 4 பேர் மீது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அவமரியாதை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Loading...

Also see...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...