ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்குமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு..

அனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்குமாறு உத்தரவிட கோரி சிரில் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்குமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு..
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 22, 2020, 1:55 PM IST
  • Share this:
கள்ளச்சந்தையில் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் சிசிடிவி பொருத்தி கண்கானிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளது.

பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 32,722 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய உணவுபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த அத்தியாவசிய உணவு பொருட்களை பெறவதகு 1,97,82,593 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது


இதேபோல் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் சர்க்கரை கிடைக்கும் வகையில் மாதம்தோறும் 35,133 மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கோதுமையை பொருத்த வரை 34,890 மெட்ரிக் டன் மெட்ரிக் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொரானா தொற்று பரவுதல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து தரப்பு மக்களும் வேலைவாய்ப்பு இணைந்து இழந்து வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி பருப்பு எண்ணெய் கோதுமை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வந்தது.Also read... கோவை: இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணிடம் நகைபறிப்பு: இளைஞர்களை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த பொதுமக்கள்...

ஆனால் பயனாளர்களுக்கு இது முழுமையாக சென்றடையவில்லை என்றும், குறிப்பாக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முழுமையான அளவில் வழங்கப்படாமல், கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளது, இதை தடுக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்குமாறு உத்தரவிட கோரி சிரில் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading