2000 ரூபாய் டோக்கன் : தஞ்சையில் வாக்காளர்களுக்கு போலி டோக்கன் வழங்கிய அமமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

2000 ரூபாய் டோக்கன் :  தஞ்சையில் வாக்காளர்களுக்கு போலி டோக்கன் வழங்கிய அமமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

போலி டோக்கன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு போலி டோக்கன் அச்சடித்து வழங்கிய அமமுக நிர்வாகி கனகராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    ngதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு போலி டோக்கன் அச்சடித்து வழங்கிய அமமுக நிர்வாகி கனகராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழக சட்டமன்றத் தேர்தலில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் விளைவாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. இருந்தும் ஒரு சில இடங்களில் பாதுகாப்பையும் மீறி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா அரங்கேறியது.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரிய கடைத்தெரு பாட்ராச்சாரியார் தெருவில், ஷேக் முகமது என்பவர் பிரியம் மளிகை ஏஜென்சி என்ற கடை நடத்தி வருகிறார். புதன்கிழமை காலையில் கடை திறந்த உடன் அதிகளவில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர். பொருட்கள் வாங்கத்தான் மக்கள் வந்துள்ளனரோ என கடை உரிமையாளர் நினைத்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

    போலி டோக்கன்


    கடையின் பெயர் மற்றும் ரூ.2000 என அச்சிடப்பட்ட டோக்கனை கடை உரிமையாளரிடம் கொடுத்த பொதுமக்கள் 2000 ரூபாய் கொடுக்கும்படி கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த ஷேக் முகமது அதுகுறித்து விசாரித்தபோது, அரசியல் கட்சியைச் சேர்ந்த சில நபர்கள், அவரது கடைப் பெயரை அச்சிட்டு போலியாக டோக்கன் விநியோகித்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விளக்கியும் பலன் ஏற்படாததால், கடையை இழுத்துப் பூட்டினார் ஷேக் முகமது. மேலும், வேட்பாளர்கள் கொடுத்த டோக்கனுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் டோக்கனுக்கு தங்கள் கடை பொறுப்பேற்காது என்றும் அச்சிடப்பட்ட நோட்டீசை கடை கதவில் ஒட்டி விட்டுச் சென்று விட்டார்.

    டோக்கனுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என பூட்டப்பட்ட கடை


    மேலும் படிக்க... ஆபாச வீடியோ அனுப்பிய நபரை கைது செய்யாத போலீசார்... டவரில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்த பெண் வேட்பாளர்

    இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் இந்த டோக்கனை வழங்கியது அமமுக நிர்வாகி கனகராஜ் என்பதை அறிந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

    கனகராஜ்


    வாக்குகளுக்குப் பணம் வாங்க வேண்டாம் என்றும் பணம் வாங்க மாட்டோம் என்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில், கடையின் பெயரை அச்சிட்டு வழங்கப்பட்ட போலி டோக்கனால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    செய்தியாளர்: குருநாதன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: