32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை சோழிங்கநல்லூரில் வட்டார போக்குவரத்து சார்பில் கார் பேரணி நடைபெற்றது.
சென்னை சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் தலைமையில் சோழிங்கநல்லூர் ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை இனைப்பு சாலை போன்ற முக்கிய சாலைகளில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி காரில் பேரணியாக சென்றனர்.
32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்தும் வகையில் நடைபெற்ற கார் பேரணியை வட்டார போக்குவரத்துக்கு நேர்முக உதவியாளர் விஜயகுமார் பச்சைநிற கொடி அசைத்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
முன்னதாக ஓட்டுநர் பயிற்சி பள்ளி கார் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வட்டார போக்குவரத்து அலுவலரும், சோழிங்கநல்லூர் போக்குவரத்துக்கு காவல் உதவி ஆய்வாளரும் வழங்கி கார் ஓட்டும்போது கண்டிப்பாக சீட்பெல்ட் அனிய வேண்டும் என்பதை வலியுறுத்தி சீட்பெல்ட் சரியாக அனிந்துள்ளனரா என்பதையும் உறுதி செய்தனர். உடன் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இராஜேந்திரன், முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.