• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காவல்நிலையம் எதிரே இருக்கும் நகைக்கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளை!

காவல்நிலையம் எதிரே இருக்கும் நகைக்கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நெல்லை கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த மணிகண்டன், நெல்லை டவுன் காவல் நிலையம் எதிரே உள்ள செங்கோல் முடுக்கு தெருவில், நகைக் கடை நடத்தி வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நெல்லையில் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த மணிகண்டன், நெல்லை டவுன் காவல் நிலையம் எதிரே உள்ள செங்கோல் முடுக்கு தெருவில், நகைக் கடை நடத்தி வருகிறார். கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக, அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து டவுன் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார்.

    தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 2 கிலோ வரை தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும், தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கடையின் உரிமையாளர் மணிகண்டன் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு காவல் துணை ஆணையர் பெரோஸ் கான் அப்துல்லா நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: