ஆசைவார்த்தை கூறி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் - படுக்கை வீடியோக்களை கூகுள் ட்ரைவில் பதுக்கிவந்த இளைஞர் கைது

Youtube Video

சிறுமிகளை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா ரோமியோ போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் வகுப்புக்காக வாங்கிக்கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள் சிறுமிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதா?

 • Share this:
  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தந்தை இறந்த நிலையில் தாயுடன் வசித்து வந்த 15 வயது சிறுமிக்கு, விருதாச்சலம் அருகே உள்ள மகேந்திர நல்லூரைச் சேர்ந்த 19 வயதான ஜெயக்குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். சிறுமியை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் இன்ஸ்டா ரோமியோ ஜெயக்குமார். சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜெயகுமார் சிறுமியின் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார்.

  அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறல் செய்துள்ளார். செவ்வாய்க்கிழமை சிறுமியின் தாய் வெளியில் சென்றிருந்ததை அறிந்த ஜெயக்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

  வழக்கம்போல் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள முயன்றுள்ளார். அப்போது வெளியில் சென்றிருந்த சிறுமியின் தாய் திடீரென வீட்டிற்கு வந்துள்ளார்.

  மேலும் படிக்க...திமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..

  மகளுடன் இளைஞர் ஒருவர் ஒன்றாக இருப்பதை பார்த்த தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். தாயை வெளியில் தள்ளி கதவின் உள்பக்கம் தாழ்போட்டுக்கொண்டு சிறுமியுடன் வீட்டுக்குள் பதுங்கியுள்ளார்.  சிறுமியின் தாய் சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று ஜெயக்குமாரை பிடித்தனர். பின்னர் சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சிதம்பரம் நகர போலீசார் வீட்டிற்கு சென்று, சிறுமியையும் ஜெயக்குமாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

  ஜெயக்குமாரின் செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் இன்ஸ்டாகிராம் மூலம் பல சிறுமிகளுடன் பழகி, அவர்களுடன் படுக்கை அறையிலும், வெளியிலும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கூகுள் டிரைவில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.


  இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமிகளிடம் பழகி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: