அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 4 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை
அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 4 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை
4 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு நியூராப்ளாஸ்டோமா என்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
4 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு நியூராப்ளாஸ்டோமா என்ற புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
சிறுநீரகத்துக்கு மேலுள்ள அட்ரினலின் என்ற உறுப்பில் இந்த புற்றுநோய் முதலில் தோன்றி பின் எலும்பு மற்றும் எலும்பு மஜ்ஜை களில் பரவியிருந்தது.
உடல் முழுவதும் புற்று நோய் பரவியிருந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த அந்த குழந்தைக்கு எப்போது எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் இது வரை பெரியவர்களுக்கு மட்டுமே எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டு வந்தது. முதல் முறையாக அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
புற்றுநோய் செல்கள் எலும்பு மற்றும் எலும்பு மஞ்ஜைகள் இருப்பதால் மற்ற புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் கீமோ தெரபி மூலம் இந்த செல்களை அழிக்க முடியாது.
எனவே அதிக சக்தி வாய்ந்த கீமோதெரபி வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கும் போது புற்றுநோய் செல்கள் மட்டுமல்லாமல் எலும்பு மஜ்ஜை செல்களும் அழிந்து விடும். அதனை அந்த செல்களுக்கு மாற்றாக புதிய செல்கள் உடலின் ரத்தத்தில் ஏற்றப்படும் இந்த எலும்பு மஜ்ஜை ஒரே மாதிரியான மரபணு கொண்ட மற்றொரு நபரிடம் இருந்து மட்டுமே பெற்று நோயாளிக்கு வழங்கமுடியும்.
இந்த சிறுவனுக்கு அவனது உடலிலிருந்து எலும்பு மஜ்ஜை எடுத்து சக்திவாய்ந்த கீமோதெரபி க்கு பின் மீண்டும் செலுத்தப்பட்டுள்ளது.
எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு பின் புதிய செல்கள் வளர மூன்று வாரங்கள் வரை ஆகும். அது வரை அந்த சிறுவன் கிருமிகள் உள் நுழைய முடியாதபடியான சூரிய வெளிச்சம் இல்லாத hepafilter வசதி கொண்ட அறையில் இருந்து சிகிச்சை பெற்றுள்ளான்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.