உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு - சட்ட மசோதா நிறைவேற்றம்..

அமைச்சர் வேலுமணி (கோப்புப் படம்)
- News18
- Last Updated: September 16, 2020, 4:35 PM IST
உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்துவரும் தனி அலுவலர்களின் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா நிறைவேறியது.
சட்டப்பேரவையில் இன்று 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் மூன்றாம் திருத்த சட்ட மசோதா மற்றும் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊரட்சிகள் மூன்றாம் திருத்த சட்ட மசோதாக்களை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.
அதில் உச்சநீதிமன்றம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 6 மற்றும் 11-ம் தேதியிட்ட ஆணையைத் தொடர்ந்து மறுசீரமைக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகியவற்றிலுள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளின் எல்லை வரையறை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்காக, வாக்காளர் பட்டியல் தயாரித்தல் போன்ற முன்னேற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இதற்கிடையில், திடீரென்று கொரோனா தொற்று நோய் பரவி வருவதால், மத்திய, மாநில அரசுகளால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு எந்திரம் போர்கால அடிப்படையில் கொரானா நோய் தடுப்பு பணிகள், பாதுகாப்பு பணிகள், மீட்பு மற்றும் நலவாழ்வு பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
எனவே, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபடி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் தனி அலுவலர்களின் பதவிக் காலமானது இந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதியன்று முடிந்ததை தொடர்ந்து, தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் வகையில் சட்ட மசோதா இன்று பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை திமுக ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தது.
Also read... சென்னை-புதுச்சேரி பேருந்து கட்டணம் ரூ.180.. ஊருக்குள் வருவதற்கு ஆட்டோ கட்டணம் ரூ.100... பயணிகள் வேதனை..
திமுக சார்பில் பேசிய மா.சுப்பிரமணியன், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காகவே பதவிக்காலத்தை நீட்டிப்பதாக குற்றம்சாட்டினார்.
இதயடுத்து உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் இன்று 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் மூன்றாம் திருத்த சட்ட மசோதா மற்றும் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊரட்சிகள் மூன்றாம் திருத்த சட்ட மசோதாக்களை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.
அதில் உச்சநீதிமன்றம் 2019-ம் ஆண்டு டிசம்பர் 6 மற்றும் 11-ம் தேதியிட்ட ஆணையைத் தொடர்ந்து மறுசீரமைக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகியவற்றிலுள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளின் எல்லை வரையறை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.