யாசகர் ஒருவர் கடைக்காரரிடம் ஒரு நாளைக்கு ரூ.2000-க்கு சம்பாதிக்கிறேன், என் கூட வர்றியா? என நக்கலாக கேட்டுச்சென்ற நிலையில், அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரோட்டில் உள்ள கடை ஒன்றில் யாசகம் கேட்ட இளைஞர் - கடை உரிமையாளருக்கு இடையே நடந்த உரையாடலின் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், கடை ஒன்றில் யாசகம் கேட்டு சென்ற சாட்டையடி இளைஞரிடம், கடையின் உரிமையாளர் எவ்வளவு வேலை இருக்கிறது. போய் வேலை பார்க்க வேண்டியதானே என கேட்கிறார். அந்த நபர் அதற்கு எவ்வளவு சம்பளம் தருவீர்கள் என கேட்கிறார். ஒரு நாளைக்கு ரூ.400 சம்பளம் தருகிறேன் என்கிறார். ரூ.400க்கு வேலை செய்யனுமா? ஒரு நாளைக்கு ரூ.2000ம் சம்பாதிக்கிறேன்.
சும்மா கொடுத்தா சம்பாதிக்க தான் செய்வ என கடைக்காரர் கூறுகிறார். அதற்கு அவர் வேலை செய்கிறேன் ரூ.2000 சம்பளம் தாருங்கள் என கூறுகிறார். அதற்கு அவர் ரூ.2000 சம்பாதிக்கிற நீ தான் எங்களை விட கோடீஸ்வரர் என கூறுகிறார்.
இதை கேட்டு கடுப்பான அந்த சாட்டையடி இளைஞர், ஒன்று இருக்கு என்றால், இருக்கு என்று சொல்லுங்க, இல்லையென்றால், இல்லை என்று சொல்லுங்க என்கிறார். அதற்கு அந்த கடைக்காரரோ, அப்படியெல்லாம் சொல்ல முடியாது, வேலைக்கு ஆள் வேண்டும் வேண்டுமானால் வா, என்கிறார் கடைக்காரர்.
இதற்கு பதிலளித்த சாட்டையடி இளைஞர், வேண்டுமென்றால் நீங்க என்னுடன் வாங்க என்று நக்கலாக கூறியபடி அங்கிருந்து செல்கிறார்.
நடந்த இந்த சம்பவம், கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, சமூகவலைதளங்களில் இந்த சுவர்ஸ்ய உரையாடல் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.