• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிவகங்கையில் யாசகம் பெற்று சேமித்த ரூ.5,000ஐ கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்

சிவகங்கையில் யாசகம் பெற்று சேமித்த ரூ.5,000ஐ கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்

சிவகங்கையில் யாசகம் பெற்று சேமித்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் ஒரு முதியவர்

  • Share this:
சிவகங்கை அருகே மலை அழகிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 87 வயதான முதியவர் முத்துக்கருப்பன். கடந்த பத்து வருடமாக சித்தர் கோவில் வாசலில் யாசகம் பெற்று வந்துள்ளார். இந்த முதியவர் யாசகம் பெற்று சேமித்து வைத்த பணத்தில் 5,000 ரூபாயை இன்று சிவகங்கை வட்டாட்சியர் மைலாவதியிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பே மனைவி 2 மகன்களை விட்டுவிட்டு வெளியேறி கோவில் வாசல்களில் யாசகம் பெற்று வரும் இவர், அதன் மூலம் சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதியவர் முத்துக்கருப்பன் செயலைப் பாராட்டி வட்டாட்சியர் மைலாவதி அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: