• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பணக்கார பெண்ணை திருமணம் செய்வதற்காக காதலியைக் கொன்ற ராணுவ வீரர் கைது!

பணக்கார பெண்ணை திருமணம் செய்வதற்காக காதலியைக் கொன்ற ராணுவ வீரர் கைது!

காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர்!

காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர்!

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், திற்பரப்பைச் சேர்ந்த மற்றொரு ராணுவ வீரரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பணக்கார பெண்ணை திருமணம் செய்வதற்காக, காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கேரளாவைச் சேர்ந்த ராக்கிமோள் என்ற பெண்ணை ஜூன் மாதம் 21-ம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

புகாரின் பேரில் ராக்கியை தேடி வந்த போலீசார், அவரது செல்போன் சிக்னல் கடைசியாக கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லையோரம் உள்ள அம்பூரி என்ற கிராமத்தில் ராணுவ வீரர் அகிலின் வீடு அருகே கிடைத்ததை கண்டுபிடித்தனர்.

அகிலின் வீட்டில் 3 நாட்களுக்கு முன் சோதனை மேற்கொண்ட கேரள காவல்துறையினர், தோட்டத்தில் சந்தேகப்படும் படி காணப்பட்ட இடத்தில் தோண்டி பார்க்க, அங்கு ராக்கிமோளின் சடலம் இருந்தது.

கேரளாவில் மறைந்திருந்த ராகுல் நேற்று கைது

விசாரணையில், மிஸ்டு கால் மூலம் 6 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான ராக்கியை அகில் காதலித்து வந்ததும் பணக்கார பெண்ணை திருமணம் செய்வதற்காக ராக்கியை அகில், அவரது சகோதரர் ராகுல், நண்பர் ஆதர்ஷ் ஆகியோர் சேர்ந்து கொன்று புதைத்ததும் தெரிய வந்தது.

ஆதர்ஷ் 25-ம் தேதியே கைது செய்யப்பட அகிலும், ராகுலும் தலைமறைவாகினர். இந்நிலையில் கேரளாவில் மறைந்திருந்த ராகுல் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “கொலை தொடர்பான மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

கடந்த பிப்ரவரி மாதம் அகிலும், ராக்கியும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அண்மையில் அகிலுக்கும் பணக்கார பெண்ணுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ராக்கிமோள்


இந்த தகவலை அறிந்த ராக்கி பிரச்னை செய்ய, அவரை சமாதானம் பேசுவதற்காக தனது வீட்டிற்கு காரில் அழைத்து வந்துள்ளார் அகில்.

சமாதானப்படுத்தலை ராக்கி ஏற்காத நிலையில், அவரை கொல்ல திட்டமிட்டு, காரில் ஏற்றி சைலண்சரை உடைத்து சத்தம் ஏற்படுத்தி, அந்த சத்தத்திலேயே கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளனர்.

பின்னர் உடலை தோட்டத்திற்குள் கொண்டு வந்து புதைத்தது, ராகுலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது”.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், திற்பரப்பைச் சேர்ந்த மற்றொரு ராணுவ வீரரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. இதனிடையே, விடுப்பு முடிந்து அகில் மீண்டும் ராணுவப் பணிக்கு செல்லவில்லை என்பதை உறுதிபடுத்திய கேரள போலீசார், தொடர்ந்து அவரை தேடி வந்தனர்.

ஒருமுறை போலீசாரின் செல்போன் அழைப்பை ஏற்ற அகிலிடம், உடனடியாக சரண் அடையுமாறு அறிவுறுத்தி இருந்தனர். அதன்பின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆன நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அகிலின் செல்போன் சிக்னல் கிடைத்துள்ளது. உடனடியாக அவரை அங்கேயே போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

மேலும் படிக்க...ஏழை என்பதால் காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர்!





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: