ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரூ.31 ஆயிரத்துக்கு பழைய நோட்டுகள்: பணமதிப்பிழப்பு தெரியாத 92 வயது மூதாட்டி! பரிதவிக்கும் சோகம்

ரூ.31 ஆயிரத்துக்கு பழைய நோட்டுகள்: பணமதிப்பிழப்பு தெரியாத 92 வயது மூதாட்டி! பரிதவிக்கும் சோகம்

கமலாம்பாள் பாட்டி

கமலாம்பாள் பாட்டி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பணமதிப்பிழப்பு தெரியாமல் கோவையில் 92 வயதான  மூதாட்டி ஒருவர் 31,500 மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுகளை  சேமித்து வைத்துள்ளது தற்போது  தெரியவந்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு  மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் அதனால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கவில்லை.

பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது தெரியாமல், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு பழைய ரூபாய் நோட்டுகளை திருப்பூர் மாவட்டம் பூமலூரைச் சேர்ந்த ரங்கம்மாள், தங்கம்மாள் என்ற வயதானவர்கள் வைத்திருந்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. அதில், ரங்கம்மாள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவர்கள் சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்துக்கு மதிப்பே இல்லாமல் போனது.

தற்போது, இதேபோல கோவையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கோவையை அடுத்த கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்  92 வயதான  கமலம்மாள்.

இவரது கணவர் ராஜ்வாலா இறந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இவர்களின் இரண்டு மகள்கள் மற்றும் மகனின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றார்.

கமலம்மாள் சிறுக, சிறுக சேமித்தப் பணத்தை பீரோவில் வைத்துள்ளார். ரூ.33,000 சேமித்து வைத்திருக்கிறார். அதில் 51 பழைய 500 ரூபாய் நோட்டுக்களும், 6 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும்  உள்ளது. வயதாகி விட்டதால் கேட்கும் திறனையும் மூதாட்டி கமலாம்பாள் இழந்த நிலையில், வீட்டில் பணத்தை சேர்த்து வைத்தையே  மறந்து போயிருக்கின்றார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மகன், மகள் ஆகியோர் கேட்ட போதும் தன்னிடம் பணம் இல்லை என்று சொன்னதால் அவரது குடும்பத்தினரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. இந்நிலையில் சமீபத்தில் மூதாட்டி கமலாம்பாளின்  பீரோவை சுத்தப்படுத்தியபோது, அதில் ஒரு புடவைக்குக் கீழே பணம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த பணத்தை மாற்ற முடியாமல் கமலாம்பாளின்  குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். மூதாட்டி கமலாம்பாள் தனக்கு  இறுதிகாலத்தில் உதவும்  என  சிறுக ,சிறுக சேமித்த அந்த  பணம் பணமதிப்பிழப்பு  நடவடிக்கையால் இப்போது யாருக்கும் உதவாமல்  போனது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Demonetisation