Home /News /tamil-nadu /

மகள் வயதுடைய சிறுமியை, மூன்றாவதாக திருமணம் செய்த 43 வயது நபர் கைது

மகள் வயதுடைய சிறுமியை, மூன்றாவதாக திருமணம் செய்த 43 வயது நபர் கைது

மாதிரி படம்

மாதிரி படம்

தனது வீட்டருகே வசித்து வரும் 15 வயது சிறுமியிடம் பழகி வந்த கிருஷ்ணன், அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயத் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று கட்டாயத் திருமணம் செய்த 43 வயதுடைய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் புதூர் வலசத்துறையில் உள்ள வடிவேல் நகர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன்(43). தள்ளுவண்டியில் வாழைப்பழ வியாபாரம் செய்து வரும் இவருக்கு முதல் மனைவி இறந்ததும், இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது வீட்டருகே வசித்து வரும் 15 வயது சிறுமியிடம் பழகி வந்த கிருஷ்ணன், அவரிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடந்த செவ்வாய்க்கிழமையன்று பழனிக்கு அழைத்துச் சென்று கட்டாயத் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுமியை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தி வந்த போடி காவல்துறையினர், லட்சுமிபுரத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அருகே இருவரையும் பிடித்தனர்.

Also read... முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சிறுமியை இரண்டாவதாக திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது- முதல் கணவரையும் சிறையில் அடைத்தது போலீஸ்



இதனையடுத்து 15வயது சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த குற்றத்திற்காக கிருஷணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போடி காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மகள் வயதுடைய சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த சம்பவம் போடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Theni

அடுத்த செய்தி