கோவையில் சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை தொண்டாமுத்தூர் அருகே கோழிக்கறி தொண்டையில் சிக்கி சிறுவன் பலியானதாக புகார் எழுந்துள்ளது.

  • Share this:
கோவை மல்லிகா நகர் தொண்டாமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் காமாட்சி (30). இவரது மனைவி பின்கி (28) இவர்களுக்கு நான்கு வயதில் கபிலேஷ்என்ற மகன் உள்ளான். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி பின்கி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வடவள்ளியில் லிங்கேஷ என்பவருடன் வேம்பு அவன்யூ பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சிக்கன் எடுத்து சமைத்து சாப்பிட்டனர். அப்போது குழந்தைக்கு சிக்கன் துண்டுகளை கொடுத்துள்ளனர். அது தொண்டையில் சிக்கி குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வடவள்ளி காவல் நிலையத்தில் காமாட்சி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் உடலை தந்தையிடம் ஒப்படைத்தனர்.

4 வயது குழந்தை சிக்கன் துண்டு சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading