கோழிக்கறிக் கடை நடத்துவதில் தகராறு.. இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை

கோழிக்கறிக் கடை நடத்துவதில் தகராறு.. இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை
மாதிரி படம்
  • Share this:
தஞ்சை மாவட்டத்தில் கோழிக்கறிக் கடை நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் 30 வயது நபர் மதுபானக் கடை வாசல் முன்பு சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் 30 வயதான உதயா. இவர் அம்மாப்பேட்டை சந்தையில் தேவி பிராய்லர்ஸ் என்ற பெயரில் கோழிக்கறிக் கடை நடத்தி வந்தார்.

சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில், தனது கடைக்கு எதிர்ப்புறமுள்ள மதுபானக் கடைக்கு சென்றார். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அதிக மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கத் திட்டமிட்டிருந்தார்.


உதயா வரிசையில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த 2 பேர், திடீரென உதயாவை அரிவாளால் தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்துச் செல்ல அவர் முயன்றபோது அவரது முகத்திலேயே அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர்.

ரத்த வெள்ளத்தில் விழுந்த உதயா அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

அதில், உதயாவின் நண்பர்களான 32 வயதான சுபாஷ் மற்றும் மணிகண்டன் இருவரையும் பிடித்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் உதயாவின் கடைக்கு அருகிலேயே சுபாஷ், மணிகண்டன் கோழிக்கறிக் கடை நடத்தி வந்தனர்.

தனது கடைக்கு அருகில் அவர்களும் கடை போட்டது உதயாவுக்குப் பிடிக்கவில்லை; அதனால் அவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் உதயாவின் கடைக்கு கூட்டம் சென்றதால், சுபாஷின் கடை காத்தாடியது.

Also read... கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தற்கொலை... உறவினர்கள் போராட்டம்

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் உதயாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், 2015ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் உதயா மீதும் வழக்குப் பதிவாகியிருப்பதால் அதுவும் கொலைக்கு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading