கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இளம்பெண் உயிரிழப்பு... மருத்துவர்கள் வேலை நிறுத்தமே காரணம் என்று புகார்...!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஷிபானாவின் உறவினர்கள்

மருத்துவர்கள் சிகிச்சையளிக்க காலதாமதம் செய்ததால்தான் உயிரிழந்ததாகக் கூறி, இளம்பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவர்கள் வேலை நிறுத்தமே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

  சென்னை அமைந்தகரையில் வசித்து வரும் சலீம் - ஷிபானா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஷிபானாவிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  இளம்பெண்ணுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஷிபானா சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

  இதனால் சோகத்தில் ஆழ்ந்த இளம்பெண்ணின் உறவினர்கள் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க காலதாமதம் செய்ததால்தான் ஷிபானா உயிரிழந்ததாக கூறினர்.

  இதனைக் கண்டித்து இளம் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் செவிலியரை அணுகி இளம்பெண்ணுக்கு ஊசி போட்டுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அலட்சியமாக கூறியதாகவும், இரண்டாயிரம் பேருக்கு ஒரு மருத்துவர்தான் சிகிச்சையளிப்பதாகவும் இளம்பெண்ணின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: