மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கு 20% கட்டணச் சலுகை!

மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கு 20% கட்டணச் சலுகை!
சென்னை மெட்ரோ ரயில்
  • News18
  • Last Updated: September 11, 2020, 12:10 PM IST
  • Share this:
மின்னணு முறையில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக பயண கட்டணத்தில் 20 சதவீதக சலுகை வழங்கும் திட்டம் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை கடந்த 7ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.  பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பயணச்சீட்டு பெற டிக்கெட் கவுன்ட்டர்கள் முன் பயணிகள் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வகையில், பயணிகள் தங்களது ஸ்மார்ட்போனில் CMRL எனும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் QR தொழில்நுட்பத்தின் மூலம் தங்களது டிக்கெட்களை பதிவு செய்து கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


இவ்வாறு மின்னணு முறையில் டிக்கெட் பெறும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பயணக் கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை அளிக்கும் திட்டம் இன்று காலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.Also read... திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஒருமுறை பயண டிக்கெட், ரிட்டன் டிக்கெட் உள்ளிட்ட அனைத்து வித பயண டிக்கெட்களை QR தொழில்நுட்பத்தில் பெறும் அனைத்து பயணிகளுக்கும் இந்த கட்டண சலுகை பொருந்தும்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகளுக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading