ஃபேஸ்புக்கில் காதலிப்பதாக கூறி காவலர் ஏமாற்றியதால் சிறுமி தீக்குளிப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துவரும் கிரேசி வீடியோ வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், அந்த வாக்குமூலத்தில் தனது இந்த நிலைக்கு காவலர் மகேஷ் தான் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் காதலிப்பதாக கூறி காவலர் ஏமாற்றியதால் சிறுமி தீக்குளிப்பு
மாதிரி படம்
  • News18
  • Last Updated: November 21, 2020, 10:25 AM IST
  • Share this:
சென்னை வியாசர்பாடியில் ஃபேஸ்புக் மூலம் காதல் செய்து காவலர் ஏமாற்றியதால், மன உளைச்சலில் இருந்த 17 வயது சிறுமி தீக்குளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19வது தெரு வை சேர்ந்தவர்கள்  ஜான் கென்னடி மற்றும் எலிசபெத் தம்பதியினர். இவர்களுக்கு கிளின்டன் என்ற மகனும் (கிரேசி) என்ற 17 வயது மகளும் உள்ளனர். மின்ட் பகுதியில்  உள்ள கேட்டரிங் இன்ஸ்டியூட்டில் கிரேசி படித்து வருகிறார்.

இவர் கடந்த 6 மாதங்களாகவே அரக்கோணத்தை சேர்ந்த மகேஷ் என்ற நபரோடு முகநூல் மூலமாக பழக்கமாகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் புழல் சிறையில் காவல் கண்காணிப்பாளருக்கு துப்பாக்கி பாதுகாப்பு பணியில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.


இது கிரேசியின் பெற்றோர்களுக்கு தெரிந்து தட்டி கேட்ட தாகவும், மேலும் கிரேசியின் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. மேலும் 6 மாதமாக காதலித்து விட்டு தற்பொழுது திருமணம் செய்ய மகேஷ் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிரேசி, நேற்று மாலை அவரது அம்மாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Also read... அரசு இ-சேவை என்பது காகித அளவிலேயே உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்திஇந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் கிரேசி தனது அறையில் மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு  அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.80 சதவீத காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துவரும் கிரேசி வீடியோ வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், அந்த வாக்குமூலத்தில் தனது இந்த நிலைக்கு காவலர் மகேஷ் தான் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
 
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading