3 ஆண் நண்பர்களோடு தங்கியிருந்த 16 வயது சிறுமி.. பள்ளி வளாக பேருந்தில் அட்டகாசம்

கோப்பு படம்

சென்னையில் மூன்று ஆண் நண்பர்களோடு பள்ளி வளாகத்தில் பேருந்தில் தங்கியிருந்த 16 வயது சிறுமி சிக்கியுள்ளார்.

 • Share this:
  சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் காவலாளியாக வேலை செய்துவரும் கோட்டீஸ்வரன் என்பவர், பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை நகர்த்த முற்பட்டார். அப்போது பேருந்தில் இருந்த மூன்று பேர் தப்பியோடியதை அடுத்து, ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்து அரும்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த நபர், ஆண்கள் போல சிகை அலங்காரம் செய்து, ஆண்களைப் போலவே ஆடை அணிந்து வலம்வரும் 16 வயது TOMboy என அடையாளப்படுத்திக் கொள்ளும் சிறுமி என்பது தெரியவந்தது.

  சிறுமியிடம் விசாரித்தபோது சென்னை ஜாம்பஜார் மீர்சாகிப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும், அங்குள்ள சாலையோரத்தில் தங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தனது சொந்த ஊர் திருச்சி எனக் கூறிய அச்சிறுமி, கார்த்திக், நிஜாம், தேவா ஆகிய மூன்று இளைஞர்களுடன் சேர்ந்து கிழக்கு கடற்கரைக்கு சாலைக்கு சென்றார். பின்னர், தனியார் பள்ளியின் சுவர் ஏறி குதித்து பள்ளியின் பேருந்துக்குள் கஞ்சா போதையிலே டிக்-டாக் செய்துவிட்டு தூங்கியதாகவும் கூறினார்.

  Also Read : பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஒன்றரை லட்ச ரூபாயை பறிகொடுத்த அப்பாவி மனிதர்!

  அதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியின் தந்தையை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். பிறகு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலம் சிறுமியை தந்தையோடு அனுப்பி வைத்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா என்று விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தப்பியோடிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: