13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் இரண்டாவது கணவர்! கன்னியாகுமரி அருகே கொடூரம்

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்தபோது அவர் கருவுற்றிருந்தது தெரியவந்தது.

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் இரண்டாவது கணவர்! கன்னியாகுமரி அருகே கொடூரம்
சசிகுமார்
  • News18
  • Last Updated: September 11, 2019, 3:02 PM IST
  • Share this:
கன்னியாகுமரி மாவட்டத்தில், 13 வயது சிறுமியை அவரது தாயாரின் இரண்டாவது கணவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியுள்ளார். போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார் 35 வயதான அந்தப் பெண். அவருக்கு 13 வயதில் மகள் உள்ளார்.

அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார் அந்த சிறுமி, கடந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, ஞாயிற்றுக்கிழமை அன்று கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.


ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்தபோது அவர் கருவுற்றிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக குளச்சல் மகளிர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின.

கணவரை இழந்த நிலையில் சிறுமியின் தாய், தனது மகளுடன் தனித்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், 40 வயதான சசிக்குமாரின் அறிமுகம் அந்தப் பெண்ணுக்கு கிடைத்தது.மனைவி விவாகரத்து பெற்ற நிலையில் தனித்து வாழ்ந்த சசிக்குமாரும் அந்தப் பெண்ணும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

கேரளாவிற்கு சென்று கொத்தனார் வேலை பார்த்த சசிக்குமார் அவ்வப்போது 2-வது மனைவி வீட்டிற்கு வந்து செல்வார். மதுபோதையில் வீட்டிற்கு வரும் அவர், மனைவியை ஏதாவது வாங்கச் சொல்லி வெளியே அனுப்பி விட்டு, சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார்.

இதை வெளியே சொன்னால் நீயும் உன் தாயும் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும் எனச் சொல்லி மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார் சசிக்குமார். சிறுமியும் சசிக்குமாருக்கு பயந்து தாயிடம் கூட நடந்ததைச் சொல்ல தைரியமில்லாமல் இருந்தார்

இந்த நிலையில்தான் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு சென்றபோது அவர் கருவுற்றது தெரியவந்தது

சசிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த குளச்சல் மகளிர் போலீசார், கேரளாவிற்கு பேருந்தில் தப்பிச் செல்ல முயன்றபோது இரணியலில் வைத்து பிடித்து அவரை கைது செய்தனர்.

Also see...

First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்