Home /News /tamil-nadu /

அப்பாவின் சுமையைக் குறைக்க தள்ளுவண்டி தள்ளும் மகள்..! 

அப்பாவின் சுமையைக் குறைக்க தள்ளுவண்டி தள்ளும் மகள்..! 

அப்பாவின் சுமையை குறைக்க தள்ளுவண்டி தள்ளும் மகள்

அப்பாவின் சுமையை குறைக்க தள்ளுவண்டி தள்ளும் மகள்

நாளொன்றுக்கு நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை என்னுடன் சேர்ந்து தள்ளு வண்டியை தள்ளி எனக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தள்ளுவண்டி தள்ளும் அப்பாவின் சிரமத்தை உணர்ந்து அவரின் சுமையை குறைக்க தினசரி அப்பாவுடன் சேர்ந்து தள்ளுவண்டி தள்ளும் 10 வயது சிறுமி.

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் தற்போது புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட கணேஷ் நகர் பகுதியில் குடியிருக்கிறார். இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

மணி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தள்ளுவண்டி தள்ளி குடும்பத்தை நடத்திவருகிறார். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் தள்ளுவண்டி தள்ளும் வேலையும் அதிகமாக இல்லாததால் வறுமை அவரை வாட்டி வருகின்றது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளதால் அவ்வப்போது ஊதுபத்தி காய்கறி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை குடோனிலிருந்து கடைகளுக்கு தள்ளுவண்டி மூலம் மணி எடுத்துச்சென்று அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தள்ளு வண்டியை தள்ள மிகவும் சிரமப்பட்டு வரும் மணியின் நிலைமையை உணர்ந்த அவரது 11 வயது மகள் சுபபாரதி அப்பாவின் சுமையை குறைக்க தினசரி மாலை நேரத்தில் மணியுடன் சென்று அவருக்கு உதவியாக தள்ளு வண்டியை தள்ளி வருகிறார்.

இதுகுறித்து மணியின் மகள் சுப பாரதி கூறுகையில், நான் புதுக்கோட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் படித்து வருகிறேன். எனது அப்பா தள்ளுவண்டி தள்ளும் கூலித்தொழில் செய்து வருகிறார். தினசரி ஊதுபத்தி காய்கறி உள்ளிட்ட பொருட்களை குடோனிலிருந்து கடைகளுக்கு கொண்டு சென்று கொடுப்பார்.

அதில் வரும் வருமானத்தை வைத்து வீட்டிற்கு கொண்டு வருவார் தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் மாலைவேளையில் தள்ளுவண்டி தள்ள முடியாமல் அப்பா சிரமப்படக் கூடாது என்பதற்காக அவருடன் சேர்ந்து நானும் தள்ளுவண்டி தள்ளி சிறிது உதவியாக இருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதுகுறித்து மணி கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தள்ளுவண்டி தள்ளி பிழைப்பு நடத்தி வருகிறேன். தற்போது கொரோனா ஊரடங்கால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கூட வருமானம் இல்லை. இதனால் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மேலும் தனக்கு தள்ளுவண்டி தள்ள முடியாததால் என் மகள் எனக்கு உதவி செய்ய தினசரி மாலை வேளையில் என்னுடன் சேர்ந்து தள்ளுவண்டி தள்ளுகிறார். நாளொன்றுக்கு நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை என்னுடன் சேர்ந்து தள்ளு வண்டியை தள்ளி எனக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி