நண்பர்களுடன் ஆன்லைனில் FREE FIRE விளையாடச் சென்ற 10 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு

Youtube Video

ஞாயிற்றுக்கிழமை மாலை, தனது நண்பர்களுடன் சேர்ந்து FREEFIRE விளையாடச் செல்வதாகக் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார் அன்புக் குமார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பெரம்பலூர் மாவட்டத்தில், FREE FIRE ஆன்லைன் விளையாட்டில் நண்பர்களுடன் விளையாடச் சென்ற 10 வயது சிறுவன், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

  பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் 10 வயதான அன்புக்குமார். இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

  கொரோனோ தொற்றால் பள்ளி மூடப்பட்ட நிலையில், வீட்டில் இருந்த ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தார். ஆன்லைன் வகுப்பு நேரம் போக மீதி நேரங்களில், ஆன்ட்ராய்டு செல்போனில் ஆன்லைன் கேம்களில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார் அன்புக்குமார். அதில் FREEFIRE என்ற விளையாட்டு அன்புக்குமாருக்கு அறிமுகமான பின் இரவும் பகலும் அதிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார்.

  இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை, தனது நண்பர்களுடன் சேர்ந்து FREEFIRE விளையாடச் செல்வதாகக் கூறி விட்டு வெளியே சென்றுள்ளார் அன்புக் குமார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், கிராமம் முழுவதும் தேடியும் அன்புக்குமாரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

  இந்நிலையில் திங்கட்கிழமை காலை அதே ஊரில் ஓடும் கல்லாற்றில், தண்ணீர் தேங்கியுள்ள, மறைவான இடத்தில் அன்புக்குமார் சடலமாகக் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்த பெற்றோர், உறவினர்கள் உடனடியாக வி.களத்தூர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் அன்புக்குமாரின் தொலைபேசிக்கு போன் செய்து அவரை விளையாட அழைத்த நண்பர்கள் யார் யார், அவரை அழைத்துக்கொண்டு அவர்கள் எங்கு சென்றனர்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

  அன்புகுமார் ஆன்லைன் விளையாட்டு விளையாடுவதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: