பெரம்பலூரில் செல்போனுக்காக 10 வயது சிறுவனை ஆற்றுத் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது அம்பலம்...

Youtube Video

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே 10 வயது சிறுவன் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த விவகாரத்தில் செல்போனுக்காக அவர் தண்ணீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

 • Share this:
  பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஷோக்குமார். இவரது ஒரே மகன் அன்புகுமார். இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனோ தொற்று காரணமாக வீட்டில் இருந்த அன்புகுமார் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்காக வீட்டிலுள்ளவர்கள் அவருக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளனர். இதில் ஆன்லைன் வகுப்புகள் படிக்கும் நேரம் போக, மீதி நேரங்களில் இணையதள விளையாட்டுகளில் அன்புகுமார் அதிகமாக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

  இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் காட்டி வரும் அன்புகுமாரிடம், ஏற்கெனவே இருந்த செல்போன் பழுதானாதால், கடந்த வாரம் புதிதாக செல் வாங்கியிருந்தார். ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமுள்ள அவர், அதனை தனது புதிய செல்போனில் பதிவிறக்கம் செய்ய நண்பர் அழைப்பதாக கூறி ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டை விட்டுச் சென்றார். நெடுநேரம் ஆனபோதும் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் தேடியபோது கல்லாறு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

  கடைசியாக செல்போனில் அன்புகுமாரை தொடர்பு கொண்டு அழைத்தது யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அது ராயப்ப நகரைச் சேர்ந்த 19 வயதான தனுஷ் என்பது தெரியவந்தது. அன்புகுமார் புதிதாக வாங்கியிருந்த 8,500 ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறிப்பதற்காக, அவரை அழைத்து ஆற்றுத் தண்ணீரில் மூழ்கடித்து தனுஷ் கொன்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...  திருச்சி காவல்நிலையங்களில் தபால் வாக்கிற்கு தரப்பட்ட பணம் பறிமுதல் தொடர்பான வழக்கு... சிபிஐ விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை

  மேலும் கொலை செய்து திருடிய செல்போனை தனுஷ் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்துள்ளார். தனுஷை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: