9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி: முதலமைச்சர் அறிவிப்பு

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி: முதலமைச்சர் அறிவிப்பு

முதல்வர் பழனிசாமி

தற்போதுள்ள அசாதாரண சூழல் காரணமாக கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிப்பு.

 • Share this:
  2020- 21 கல்வியாண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

  சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர், கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் படித்து வந்ததாக குறிப்பிட்டார்.

  மாணவர்களின் பாடச்சுமையை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் கூறினார்.

  எனவே, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொண்ட அசாதரணமான சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்தார். மதிப்பெண், மதிப்பீடு நெறிமுறை அரசால் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

  9, 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு கடந்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது 9, 10, 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டாமென பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
  Published by:Suresh V
  First published: