பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி நானம்மாள் காலமானார்!

பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி நானம்மாள் காலமானார்!
நானம்மாள்
  • News18
  • Last Updated: October 26, 2019, 9:35 PM IST
  • Share this:
99 வயதிலும் யோகா செய்து அசத்திய நானம்மாள் இன்று காலமானார்.

கோவை கணபதி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த நானம்மாள். இவர் 8 வயது சிறுமியாக இருக்கும்போது தனது தந்தையிடமிருந்து யோகாசனம் கலையை கற்றுத் தேர்ந்தார்.

சுமார் 90 ஆண்டுகளாக யோகா பயிற்சியில் ஈடுபட்டதுடன் பலருக்கும் யோகாசனம் பயிற்சிகளை கற்றுக்கொடுத்து வந்தார். இதனிடையே இவரின் திறமையும் சேவையும் பாராட்டி மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.


இந்நிலையில், சமீபநாட்களாக வயோதிகம் சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நானம்மாள் தனது 99-ம் வயதில் கோவையில் இன்று காலமானார்.

நானம்மாளுக்கு 6 பிள்ளைகள், 12 பேரன்-பேத்திகள், 11 கொள்ளு பேரன்-பேத்திகள் உள்ளனர்.
First published: October 26, 2019, 9:35 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading