தமிழகத்தில் 4 ஆயிரத்து 805 கோடி ரூபாய் அளவில் 97 சதவீதம் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர்ஸ ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5 சவரனுக்குட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதன்படி, நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்டார். இதை தொடர்ந்து போலி நகைகள் வைத்து மற்றும் முறைகேடாக நகைக்கடன் பெற்றது போன்றவற்றை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அனைத்து பணிகளும் முடிந்து கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, தகுதியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் பயனாளிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 14,51,042 பயனாளிகளுக்கு 5296 கோடி அளவிற்கு 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12 லட்சத்து 19 ஆயிரத்து 106 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 5 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்
அதாவது, தகுதி வாய்ந்த 97 சதவீதம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள பயனாளிகளுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பயிர்க் கடன் அடிப்படையில் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் பெரியசாமி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold loan