92 கன அடியாக உயர்ந்த மேட்டூர் அணை... சம்பா சாகுபடிக்கு நாளை தண்ணீர் திறப்பு...

86-வது ஆண்டாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுவரை ஜூன் 12-ல் 15 முறையும், ஜூன் 12-க்கு முன்னதாக 11 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18-tamil
Updated: August 12, 2019, 9:37 PM IST
92 கன அடியாக உயர்ந்த மேட்டூர் அணை...  சம்பா சாகுபடிக்கு நாளை தண்ணீர் திறப்பு...
மேட்டூர் அணை
Web Desk | news18-tamil
Updated: August 12, 2019, 9:37 PM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92- கன அடியாக உயர்ந்ததால் நாளை முதல் தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் திறக்கபட உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால், போதிய அளவில் நீர் இருப்பு இல்லாததால், கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்துவருவதால், கிடுகிடுவென மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 92-கன அடியாக உள்ளது


 இந்நிலையில், நாளை உபரிநீர் திறக்கப்படுவதையடுத்து, அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 8.30 மணிக்கு நேரில் திறந்துவைக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு அதன் மூலம் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் மூலம் நீர் மேலாண்மை செய்து நீரை பாசனத்திற்கு பயன்படுத்துமாறு விவசாயிகளை முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

86-வது ஆண்டாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுவரை ஜூன் 12-ல் 15 முறையும், ஜூன் 12-க்கு முன்னதாக 11 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Loading...

வழக்கம்போல் இந்த முறையும் தண்ணீர் திறப்பு தாமதமானதால், டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்படவில்லை. இதையடுத்து, சம்பா சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இந்த உபரி நீர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்கள் வழியாக தஞ்சையில் உள்ள கல்லணையை 3 நாட்களில் சென்றுசேரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Also Watch: காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள் 

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...