Home /News /tamil-nadu /

ஊராட்சித் தேர்தலில் 90 வயது மூதாட்டி வெற்றி: எதிர்த்து நின்றவர்கள் டெபாசிட் இழப்பு!

ஊராட்சித் தேர்தலில் 90 வயது மூதாட்டி வெற்றி: எதிர்த்து நின்றவர்கள் டெபாசிட் இழப்பு!

மூதாட்டி பெருமாத்தாள்

மூதாட்டி பெருமாத்தாள்

90 வயது மூதாட்டி பெருமாத்தாள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட 2 வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்ததோடு 2ம் இடம் பிடித்த வேட்பாளரை விட ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தொண்ணூறு வயது மூதாட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்ப்பு போட்டியிட்ட 2 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர்.

    தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது இதற்கான வாக்கு எண்ணிக்கை 12ஆம் தேதி நடைபெற்றது பெரும்பாலான இடங்களில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

    இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட 2 வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்ததோடு 2ம் இடம் பிடித்த வேட்பாளரை விட ஆயிரம் வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    திராவிட முன்னேற்றக் கழக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நேரில் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வந்து பெற்றுக் கொண்டதுடன் தனக்கு வாக்களித்த கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துகொண்டார். தனது ஊராட்சியைச் சேர்ந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கிணற்றில் தள்ளி விட்டார்களே படுபாவிகள்... தரையில் உருண்டு அழுத ’கிணறு சின்னம்’ வேட்பாளர்!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Local Body Election 2021, Tirunelveli

    அடுத்த செய்தி