ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குறித்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தடுப்பூசி அவசியம் : காய்ச்சல் மற்றும் நிமோனியாவிற்கான முக்கியமான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதில் தாமதம் காட்டாதீர்கள். ஏனெனில் இவை நுரையீரல் தொற்றுகளைத் தடுக்கவும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

தடுப்பூசி அவசியம் : காய்ச்சல் மற்றும் நிமோனியாவிற்கான முக்கியமான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதில் தாமதம் காட்டாதீர்கள். ஏனெனில் இவை நுரையீரல் தொற்றுகளைத் தடுக்கவும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்பது அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா மரணங்கள் குறித்து மருத்துவத் துறை ஆய்வு செய்துள்ளது.

  இரண்டு மாத காலத்தில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 33,575 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 71 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 17.93 சதவீதம் பேர். 11 சதவீதம் பேர், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.

  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2,915 பேரில், 74.14 சதவீதம் பேர், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 17.49 சதவீதம் பேர். இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்கள் 8.37 சதவீதம் பேர் என்பதும் தெரியவந்துள்ளது.

  மேலும், இரண்டு மாத காலத்தில் 1,268 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 1,129 பேர், அதாவது 89.04 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். 94 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பதும், 45 பேர் அதாவது 3.55 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

  இதன்மூலம், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலையும், உயிரிழப்பும் பெருமளவில் குறைவது தெரியவந்துள்ளது. எனவே, இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Corona, Covid-19, Covid-19 vaccine