• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது!

தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது!

மீனவர்கள்

மீனவர்கள்

மீனவர்களை சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தும் நோக்கில் இன்று யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைக்கவுள்ளார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த  9 மீனவர்களை  இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் தொண்டியைச் சேர்ந்த 9 மீனவர்கள் 2 நாட்டுப்படகுகளில் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது மாலை நெடுந்தீவு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக கூறி அவர்களை கைது செய்தனர்.

அத்துடன் அவர்கள் சென்ற 2 நாட்டு படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு , ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் மீனவர்களை மார்ச் 8-ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மீனவர்களை சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தும் நோக்கில் இன்று இவர்களை யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைக்கவுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also see... ஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: