இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது
கற்கள்,பாட்டில்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை ஒரு விசைப் படகுடன் 9 தமிழக மீனவர்களையும் கைது செய்துள்ளது.
- News18 Tamil
- Last Updated: January 10, 2021, 12:19 PM IST
ராமேஸ்வரம் அருகே தமிழக மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு, தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களை சிறை பிடித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இந்திய கடல் எல்லைக்குள் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி தாக்கியுள்ளனர். கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி மீனவர்களை தாக்கிய கடற்படையினர் படகுகளில் இருந்த வலை உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஒரு படகை பறிமுதல் செய்ததோடு, அதிலிருந்த 9 தமிழக மீனவர்களையும் கைது செய்து இலங்கை அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட 9 பேரும் மாந்தோப்பு மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்தவர்கள்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்