ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் புதுப்பொலிவு பெற போகும் 5 ரயில் நிலையங்கள்.. ரயில் பயணிகள் உற்சாகம்..!

தமிழகத்தில் புதுப்பொலிவு பெற போகும் 5 ரயில் நிலையங்கள்.. ரயில் பயணிகள் உற்சாகம்..!

எழும்பூர் ரயில்நிலையம்

எழும்பூர் ரயில்நிலையம்

சென்னை எழும்பூருக்கு டெண்டர் திறக்கப்பட்டு, ஒப்பந்தம் வழங்குவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai [Madras]

  தமிழகத்தை சேர்ந்த 5 ரயில்நிலையங்கள் உட்பட தெற்கு ரயில்வேயில் உள்ள 9 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

  தமிழகத்தைச் சேர்ந்த 5 ரயில் நிலையங்கள் உட்பட தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள 9 ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு நிகராக மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தெற்கு ரயில்வேயில் கூடுதலாக 38 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்வது குறித்து அடுத்த கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ்  தெற்கு ரயில்வேயில் உள்ள 9 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்யும் பணி, சம்பந்தப்பட்ட மண்டல ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  அதன்படி சென்னை எழும்பூர், காட்பாடி , மதுரை , ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி என தமிழகத்தின் 5 ரயில் நிலையங்களும் எர்ணாகுளம் , எர்ணாகுளம் டவுன் மற்றும் கொல்லம்  என கேரள மாநிலத்தில் மூன்று ரயில் நிலையங்களும் மற்றும் புதுச்சேரி ரயில் நிலையமும்  என ஒன்பது ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்ய கடந்த மே மாதம் அனுமதி வழங்கப்பட்டது.

  இதில் சென்னை எழும்பூர், கன்னியாகுமரி தவிர அனைத்து ரயில் நிலையங்களுக்கும் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.  சென்னை எழும்பூருக்கு டெண்டர் திறக்கப்பட்டு, ஒப்பந்தம் வழங்குவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது.

  ALSO READ | ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், திருமாவளவன் பேரணி நடத்த அனுமதி மறுப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  கன்னியாகுமரி நிலையத்திற்கு டெண்டர் கோரப்பட்டு 26-10-2022 அன்று திறக்கப்பட உள்ளது. இவை தவிர தமிழகத்தில் கும்பகோணம் மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையமும் , கேரளாவில் செங்கனூர் மற்றும் திருச்சூர் ஆகிய ரயில் நிலையங்களும் என மொத்தம் நான்கு ரயில் நிலையங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வையும் தெற்கு ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

  மேலும் சென்னை சென்ட்ரல், தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர் , திருவனந்தபுரம் , வர்க்கலா , கோழிக்கோடு , மங்களூர் உட்பட  தெற்கு ரயில்வேயில் மேலும் 38 நிலையங்கள் மறுவடிவமைப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் ரயில்வே வாரியத்தின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.  மேலும் சாத்தியக்கூறுகளுக்கு உட்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Southern railway, Train