Home /News /tamil-nadu /

பல்லாவரம் காவல்நிலையத்தில் ஆய்வாளர் உட்பட12 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

பல்லாவரம் காவல்நிலையத்தில் ஆய்வாளர் உட்பட12 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

Pallavaram police station

Pallavaram police station

குற்றப்பிரிவு ஆய்வாளர்  உட்பட 12 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பல்லாவரம் காவல்நிலையத்தில் ஆய்வாளர் உட்பட 12 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் மீண்டும் வேகமாக கரோனா தொற்று பரவி வருகிறது. அதிலும் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு,மாநகராட்சி ஊழியர்கள், தனியார் ஜவுளி கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் என தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் 81 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதே போல தாம்பரம் மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் 36 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  இதே போல குரோம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல வணிக நிறுவனம் ஒன்றில் 30க்கும் மேலான ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    Also read:  அந்தரங்க உறுப்பில் கடித்து வயதான கணவர் செக்ஸ் கொடுமை - இளம் மனைவி பரபரப்பு புகார்

    இந்தநிலையில் பல்லாவரம் காவல் நிலையத்தில் சில போலீசாருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அதில் குற்றப்பிரிவு ஆய்வாளர்  ரவி உட்பட 12 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து ஏழு காவலர்கள் வீட்டு தனிமையிலும் இரண்டு காவலர்கள் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஒரே காவல் நிலையத்தில் 12 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Corona, Pallavaram

    அடுத்த செய்தி