• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக அகற்றம் - அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக அகற்றம் - அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக அகற்றம் - அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக அகற்றம் - அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • Share this:
ராமநாதபுரம், விழுப்புரம், தர்மபுரி, கரூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிபேட்டை,  விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது.

Also read: மதுரை ஆதீனம் கவலைக்கிடம்.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கடந்த ஜூலை 23ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 471 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாகவும், அதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை விருதுநகர், தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், அதிகபட்சமாக  சென்னையில் 85 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதாகவும், அதேபோல், குறைந்தபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 947 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: