Home /News /tamil-nadu /

9 நாட்கள் தொடர் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பால் மாணவர்கள் ஹேப்பி

9 நாட்கள் தொடர் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பால் மாணவர்கள் ஹேப்பி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பேருந்து இல்லாததால் தான் தொங்கிக் கொண்டு செல்வதாக மாணவர்கள் கூறியுள்ளனர். இதற்கு தீர்வு காண பேருந்து இயக்கப்படும் நேரம் மாற்றி அமைக்கப்படும்

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

    நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்க அளித்த பேட்டியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது-

    ஆகஸ்ட் மாதம் கல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தின்போது, பள்ளி கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்.

    பள்ளி அறைகளில் இருக்கும் மின் அளவீட்டு பெட்டிகள் 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கும். அவற்றையும் கவனிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம்.

    அதில் தண்ணீர் புகுந்து ஷாக் ஏற்பட்டு விடக் கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தோம். ஒட்டுமொத்தமாக பள்ளிகளின் தரத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இது ஒருபக்கம் இருந்தாலும், துரதிருஷ்டவசமாக நெல்லை பள்ளியில் துயரமான சம்பவம் நடந்திருக்கிறது.

    சேதம் அடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து தர வேண்டும் என்று பொதுப் பணித்துறையை கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களும் இதுபோன்ற கட்டிடத்தில் அமர வைக்கப்படக் கூடாது.

    இதையும் படிங்க : பள்ளி மாணவிகளை வீடியோ எடுத்து டார்சர் செய்த இளைஞர் - கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய மாணவிகள்

    பேருந்து படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு போவதாக புகார்கள் வந்துள்ளன. இதற்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : செல்போனுக்கு வந்த ஆபாச மெசேஜ்.. மாங்காடு பள்ளி மாணவி தற்கொலையில் சிக்கிய கல்லூரி மாணவர்

    மாணவர்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டு சென்றால் நடத்துனர்கள், பேருந்து ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் தொங்கிக் கொண்டு செல்வதை நடத்துனர்கள் அனுமதிக்கக் கூடாது. இளங்கன்று பயம் அறியாது என்பதைப் போல மாணவச் செல்வங்கள் பேருந்தில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர்.

    பேருந்து இல்லாததால் தான் தொங்கிக் கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். இதற்கு தீர்வு காண பேருந்து இயக்கப்படும் நேரம் மாற்றி அமைக்கப்படும். அல்லது, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

    இதையும் படிங்க : 1 ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் கல்வி சேவை வழங்கும் பள்ளி

    டிசம்பர் 25-ம்தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும். பாலியல் குற்றச்சாட்டுகளை மிக சீரியஸாக எடுத்துக் கொண்டு அவற்றின் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: School, Tamilnadu

    அடுத்த செய்தி