சிறப்பு முகாமில் 88-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..!

மாநகராட்சியின் நிரந்தர முகாமில்  அவருக்கு இடம் கிடைக்க வழிவகை செய்தால் அவரின் இறுதிக்காலம் மகிழ்ச்சியானதாக அமையாவிட்டாலும் நிம்மதியானதாக அமையும்.

சிறப்பு முகாமில் 88-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..!
மாநகராட்சியின் நிரந்தர முகாமில்  அவருக்கு இடம் கிடைக்க வழிவகை செய்தால் அவரின் இறுதிக்காலம் மகிழ்ச்சியானதாக அமையாவிட்டாலும் நிம்மதியானதாக அமையும்.
  • Share this:
தூத்துக்குடி மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் வெ. கோமதி 88 வயதான இவர் 60 ஆண்டுகளுக்கு முன்னரே நெல்லை புனித சவேரியார் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு M.sc முடித்தவர். சரளமாக ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேசக்கூடியவர். தற்போது ஊரடங்கு காரணமாக திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் தற்காலிக சிறப்பு முகாமில் தங்கி இருக்கிறார்.

இவரது கணவர் சென்னையில் பிரபல ஆடிட்டரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு 1997-இல் உயிரிழந்துவிட்டார். ஒரே மகன் வெளிநாட்டில் இருந்ததால் கையில் இருந்த பணத்தோடு முதியோர் இல்லத்தில் சேர்ந்துள்ளார். பணம் கறைய வெளிநாட்டிலிருந்து மகன் பணம் அனுப்புவதையும் நிறுத்த 10 ஆண்டுகள் உருண்டு ஓடியது.

இந்நிலையில் பணம் கட்டமுடியாமல் 2007-இல் முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே கணவர் இறந்ததிலிருந்து துன்பம் ஆரம்பித்த நிலையில் அப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. உணவிற்கு வழியின்றி ஊர் ஊராக பஸ் ஸ்டாண்ட் கோவில் தெரு ஓரம் என அடுத்த பத்தாண்டுகளை கழித்துள்ளார்.


வெ. கோமதி பிறந்த நாள் கொண்டாட்டம்


உடல்நலக்குறைவு ஏற்படவே அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. பேரிடியாக அமைந்தது மனவேதனையுடன் உடல் வேதனையும் சேர்ந்து கொண்டது. இதனிடையே மகன் பஹ்ரனில் இருப்பது தெரியவந்ததை அடுத்து பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தொலைபேசியில் அவரிடம் பேசி உள்ளார். விரைவில் வருவதாக கூறிய அவர் கடைசி வரை வரவே இல்லை.

சிறிது காலம் திருச்செந்தூர் கோவில் பிரகாரத்தில் தங்கி அங்கேயே யாசகம் பெற்று தனது காலத்தைக் கழித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் அங்கிருந்தவர்கள் காலி செய்யப்பட்டதால் வேறு வழியின்றி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தவுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்த அவரின் உடைமைகள் திருடு போயுள்ளது .
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக துன்பத்தை மட்டுமே சந்தித்து வந்த தற்போது தற்காலிக முகாமில் தங்கியிருக்கும் 88 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்.


செய்வதறியாது திகைத்து நின்று அவரை தன்னார்வலர் சரவணன் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து நெல்லை டவுனில் உள்ள தற்காலிக முகாமிற்கு அழைத்து வந்தனர் 40 நாட்களுக்கு மேலாக இருப்பிடம் உணவோடு ஓரளவு மன நிம்மதியோடு வாழ்ந்து வருகிறார். அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 88 ஆவது பிறந்த நாளான நேற்று தன்னார்வலர்கள் வசிக்கும் மக்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி அதோடு ஆடல் பாடல் என அசத்தினர்.

வெ. கோமதி


கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக துன்பத்தை மட்டுமே அனுபவித்து வரும் மூதாட்டி இனிவரும் நாட்களாவது மகிழ்ச்சியான நாட்களாக அமையட்டும். மாநகராட்சியின் நிரந்தர முகாமில்  அவருக்கு இடம் கிடைக்க வழிவகை செய்தால் அவரின் இறுதிக்காலம் மகிழ்ச்சியானதாக அமையாவிட்டாலும் நிம்மதியானதாக அமையும்.

Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading