Home /News /tamil-nadu /

தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் 87 சதவீதமாக அதிகரிப்பு - ஆய்வில் தகவல்

தமிழக மக்களுக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் 87 சதவீதமாக அதிகரிப்பு - ஆய்வில் தகவல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழக மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான நிலையான நோய் எதிர்ப்பாற்றல் 87 சதவீதமாக அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனோ மூன்றாவது அலை பரவல் படிப்படியாக குறையத் தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனோவுக்கு எதிரான நிலையான நோய் எதிர்ப்பாற்றல் குறித்தான நோய் எதிர்ப்பு சக்தி ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    அதில் தமிழகத்தில் நிலையான நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்றவர்கள் எண்ணிக்கை 87 சதவீதமாக அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

    இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மூன்று கட்ட ஆய்வில் 32, 29 மற்றும் 70 சதவீதமாக கணக்கிடப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த நான்காவது கட்ட சீரோ சர்வேயில் தமிழகம் முழுவதும் 1,076 நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் உட்பட மாவட்ட வாரியாக 32,245 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டத்தில் 93 சதவீதமும் அடுத்தபடியாக தென்காசியில் 92 சதவீதமும் , பெரம்பலூர் மதுரை சிவகங்கை கன்னியாகுமரி விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 91 சதவீதமும் என தமிழகத்தில் சராசரியாக 87 சதவீதத்தினருக்கு நிலையான நோய் எதிர்ப்பாற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 82 சதவீதமும் , காஞ்சிபுரத்தில் 83 சதவீதமும் நோய் எதிர்ப்பாற்றல் பதிவாகியுள்ளது.

    தடுப்பூசி செலுத்திய 27,324 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட குருதி சார் பரிசோதனை முடிவுகளில் 90 சதவீதத்தினர் முழுமையாக நிலையான எதிர்ப்பாற்றலை பெற்றிருப்பதாகவும் தமிழகம் முழுவதும் தடுப்பூசி செயல்பாடுகள் அதிகரிப்பின் காரணமாக கொரோனோவுக்கு எதிரான நிலையான எதிர்ப்பாற்றல் பெற்றவர்களின் கடந்த ஆய்வு முடிவுகளை காட்டிலும் அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

    வயது விகிதாச்சார அடிப்படையில் 10 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் 68.4 சதவீதத்தினரும், 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களில் 89.5 சதவீதமாகவும், 45 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களில் 88.6 சதவீதமாகவும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி 84.5 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

    டாஸ்மாக்கில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்க தடைகோரி வழக்கு - உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு



    இந்த நான்காவது கட்ட கொரோனா எதிர்ப்பாற்றல் சோதனையானது கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கணக்கிடப்பட்ட நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வகை பரவலால் ஏற்பட்ட மூன்றாவது அலை பாதிப்பு மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளின் செயல்பாடுகளால் தமிழகத்தில் நிலையான எதிர்ப்பாற்றல் மீதான தாக்கம் குறித்தான சீரோ சர்வே அடுத்த 6 மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus

    அடுத்த செய்தி