தமிழ்நாட்டில் டெல்டா வகை கொரோனா வைரஸால் 80% பேர் பாதிப்பு: எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலர்

ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் சுமார் 80% பேர் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, 3,417 மாதிரிகள் டிசம்பர் மாதம் முதல் இதுவரை மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டன. 2,633 மாதிரிகளின் முடிவுகள் வந்துள்ளன. இதில் 80% அதாவது 2,150 மாதிரிகள் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆகும். 2,150ல் 12 மாதிரிகள் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் ஆகும்.

  இறுதியாக அனுப்பிய 222 மாதிரிகள் அனைத்துமே டெல்டா வகை கொரோனாவாகும். அண்மையில் கண்டறியப்பட்ட அனைத்து கிளஸ்டர்களிலும் கண்டறியப்பட்டதும் டெல்டா வகை கொரோனா. பொதுமக்கள் இதனால் பதட்டப்பட வேண்டாம். டெல்டா வகை கொரோனாவுக்கான சிகிச்சை முறை அதே தான். அதை தமிழ்நாடு வழங்கி வருகிறது.

  Also read: வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்: ஓ.பி.எஸ், முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன் இடையே காரசார விவாதம்!

  ஆனால் கூட்டம் கூடுவதை, சேர்ந்து அமர்ந்து உண்ணுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அது போன்ற இடங்களில் தான் கிளஸ்டர் உருவாகிறது.

  எந்த வகை கொரோனா என்று கண்டறிவதற்கான மரபணு ஆய்வகம் தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் அமையவுள்ளது. அதற்கான உபகரணங்கள் வந்துள்ளன. சோதனை ஓட்டம் அடுத்த மூன்று நாட்கள் நடைபெறும்.

  சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் 100க்கும் அதிகமாக கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. 13 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு ஏற்றத்தாழ்வுடன் உள்ளதாகவும் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: