சிவகாசி அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை பிப்ரவரி 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் 8வயது சிறுமி அப்பகுதியில் உள்ள காட்டில் கடந்த 21-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த 20ம் தேதி சிறுமி மாயமான நிலையில் 21ம் தேதி காலை வீட்டிற்கு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முட்புதற் பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக 5 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 பேரை பிடித்து 3 நாட்களாக விசாரணை நடத்தி வந்த நிலையில் 6 பேரில் ஒருவரான மோசம் அலியை கைது செய்தனர்.
சிவகாசி அரசு மருத்துவமனையல் உடற்பரிசோதனை முடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதனை அடுத்து, கைதான நபரை 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.