Home /News /tamil-nadu /

மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு!

மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு!

உயிரிழந்த சிறுவன்

உயிரிழந்த சிறுவன்

அண்ணாசதுக்கம் போலீசார் ராட்டின உரிமையாளர் பிரகாசை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
சென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் பத்மநாபன் என்பவர் பானிப்பூரி கடை நடத்தி வருகிறார். அவரது கடை அருகே சிறுவர்கள் விளையாடும் ராட்டினம் ஓடிக்கொண்டிருந்தது.

பத்மநாபனின் 8 வயது மகன் பிரணவ் ராட்டினத்தை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தான். .

உடனே ராட்டினத்தை இயக்கியவர் சிறுவன் பிரணவை ராட்டினத்தின் நடுபுரத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின்பு ராட்டினம் மீண்டும் இயக்கப்பட்டது. அப்போது சிறுவனின் ஆடை எதிர்பாராத விதமாக ராட்டினத்தின் கம்பியில் மாட்டி கொள்ள,  நிலைதடுமாறிய பிரணவின் தலையில் ராட்டினத்தின் கம்பி பலமாக தாக்கியது.

உடனே அருகே இருந்த கோசா மருத்துவனைக்கு சிறுவனை தூக்கிச் சென்றனர். ஆனால், பிரணவ் முன்பே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னை மெரினா | Merina beach
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ராட்டினம்


சென்னை மெரினா கடற்கரையில் பெரும்பாலான ராட்டினம் ஓட்டுவோர் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதாக பிரணவின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.  எதிர் காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.



மேலும் தனது மகனை பிரேத பரிசோதனை செய்யாமல் தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவைத்தார். இந்நிலையில் அண்ணாசதுக்கம் போலீசார் ராட்டின உரிமையாளர் பிரகாசை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Also see... அதிமுகவுக்கு அடுத்த அடி... கட்சியிலிருந்து விலகுகிறாரா தோப்பு

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Marina Beach

அடுத்த செய்தி