நிதின் கட்கரிக்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காததே அது ஒப்பந்த கூட்டணி என்பது தெளிவாகிறது - திருமாவளவன்

தனிமனித தாக்குதல் மோசமான முறையிலும் வரம்புகளை மீறும் வகையிலும் பேசு நிலை வருத்தமளிக்கிறது என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

news18
Updated: April 15, 2019, 11:44 AM IST
நிதின் கட்கரிக்கு  ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காததே அது ஒப்பந்த கூட்டணி என்பது தெளிவாகிறது - திருமாவளவன்
விசிகவின் தலைவர் திருமாவளவன்
news18
Updated: April 15, 2019, 11:44 AM IST
8 வழிச்சாலையை கடுமையாக எதிர்ப்பதாக சொல்லும் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையிலேயே எட்டு வழி சாலை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காததால் அந்தக் கூட்டணி ஒப்பந்த அடிப்படையில் உருவான கூட்டணி என்பது தெளிவாகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அப்போது, பாஜக ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு சமூக சமுதாய அனைத்து தர மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் சிறுபான்மையினர் மட்டுமன்றி பெரும்பான்மையாக உள்ள இந்துக்களும் ஜிஎஸ்டி பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே நாட்டை பாதுகாக்கவும் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். எனவே தேசிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என கூறி வாக்கு சேகரித்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் 8 வழிச்சாலையை கடுமையாக எதிர்ப்பதாக சொல்லும் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையிலேயே எட்டு வழி சாலை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காததால் அந்தக் கூட்டணி ஒப்பந்த அடிப்படையில் உருவான கூட்டணி என்பதும் பொருந்தாத கூட்டணி என்பது தெளிவாகிறது என்று தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு நிலம் கொடுத்த 13 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக சொல்லி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல் புறக்கணிப்பு என்பது நிரந்தரத் தீர்வாகாது.

யார் நமக்கு உற்ற துணையாக இருப்பார்கள் என நினைத்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நான் அந்த வாக்குறுதியை தர விரும்புகிறேன். தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு பானை சின்னத்தில் வாக்களியுங்கள். மக்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவேன் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் தனிமனித தாக்குதல் அதிகளவில் உள்ளது குறித்து திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தனிமனித தாக்குதல் மோசமான முறையிலும் வரம்புகளை மீறும் வகையிலும் பேசு நிலை வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.

அதைவிட அதிமுக மற்றும் பாஜக அணியினர் தமக்கு தோல்வி ஏற்படுவது என கருத்துக் கணிப்பு முடிவுகள் அறிந்து திட்டமிட்டு வன்முறையை தூண்ட முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...