பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை நீதீமன்றத்தில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில், ஏற்கனவே சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது. புகார் தொடர்பாக இதுவரை 4 பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், இன்று மேலும் ஒரு பெண் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் அளிக்க தொடங்கி உள்ளனர். இதனால் வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
மேலும், புகார் அளித்த அந்த பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மேலும் சிலரின் பெயர்களை நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் ஒரு இளம்பெண் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.