ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடிபோதையில் தூங்கவிடாததால் ஆசிட்டை வீசிய நபர் - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!

குடிபோதையில் தூங்கவிடாததால் ஆசிட்டை வீசிய நபர் - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஆசிட் வீச்சு புகாரில் கன்னியப்பனை கைது செய்த போலீசார், 8 பேர் தாக்குதலில் காயமடைந்த ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சென்னை நெற்குன்றத்தில் குடிபோதையில் அரட்டை அடித்து, தூங்க விடாமல் செய்த நபர்கள் மீது நகைப்பட்டறை ஊழியர் ஆசிட் ஊற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நகைப்பட்டறை ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் முனியப்பா நகரைச் சேர்ந்த கன்னியப்பன் வெள்ளிப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் 3-வது மாடியில், கோயம்பேடு சந்தையில் கூலி வேலை செய்து வரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் தங்கியுள்ளனர்.

நேற்றிரவு 8 பேரும் மொட்டை மாடியில் அமர்ந்து மது குடித்தபடி, சத்தமாக அரட்டை அடித்துள்ளனர். இதனால் தூங்க முடியாமல் தவித்த நகைப்பட்டறை ஊழியர் கன்னியப்பனும், அவரது மனைவி ரஞ்சனியும் மொட்டை மாடிக்குச் சென்று தட்டிக் கேட்டுள்ளனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கன்னியப்பனையும், அவரது மனைவியையும் 8 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையறிந்து அங்கு வந்த ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கரையும், குடிபோதையில் இருந்த நபர்கள் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கன்னியப்பன், வெள்ளி நகைகளை பாலீஷ் செய்வதற்காக வீட்டில் வைத்திருந்த ஆசிட்டை தண்ணீரில் கலந்து எடுத்துவந்து, 8 பேர் மீதும் ஊற்றியுள்ளார். இதில் 8 பேருக்கும் உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான புகாரில் கன்னியப்பனை கைது செய்த போலீசார், 8 பேர் தாக்குதலில் காயமடைந்த ரஞ்சனியின் அண்ணன் பாஸ்கரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Also see...மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விவசாயிக்கு அரிவாள் வெட்டு: மாணல் பாபியா அட்டுழியம்

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Acid attack, Chennai