கோவை அரசு மருத்துவமனையில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்: குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படை போலீசார்

24 மணி நேரத்தில் திருவாரூரில் குழந்தையை மீட்ட காவல் துறை. குழந்தையை கடத்திய தம்பதி கைது.

கோவை அரசு மருத்துவமனையில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்: குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படை போலீசார்
24 மணி நேரத்தில் திருவாரூரில் குழந்தையை மீட்ட காவல் துறை. குழந்தையை கடத்திய தம்பதி கைது
  • Share this:
கோவை அரசு மருத்துவமனையில் இருந்து 8 மாத குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக,  திருவாரூரில் தம்பதியை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து  குழந்தையை மீட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செல்வம் -செல்வரராணி  தம்பதி. இவர்கள் தற்போது திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தம்பதியினருக்கு கோவை அரசு மருத்துவமனையில்  இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இரு குழந்தைகளுடன்  திருப்பூரில் வசித்த போது , இவர்களுக்கு  திருப்பூரை  சேர்ந்த  விக்னேஷ் பிரபாவதி தம்பதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  செல்வம் -  செல்வராணி, தம்பதியரின் 8 மாத  இரட்டை ஆண் குழந்தைகளுக்கு கோவை அரசு  மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் வாங்க கடந்த வெள்ளிகிழமை பிற்பகல் வந்துள்ளனர். அப்போது அவர்களுடன் விக்னேஷ் பிரபாவதி  தம்பதியினரும் உடன் வந்துள்ளனர்.


மருத்துவமனை வளாகத்தில் இருந்த போது செல்வமும், விக்னேசும் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது  குழந்தையின் எடையை பரிசோதித்து வருவதாக  இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை  வாங்கிகொண்டு பிரபாவதி சென்றுள்ளார்.

அதே வேளையில் செல்வத்துடன் இருந்த விக்னேஷ்  முக்கியமான வேலை இருக்கின்றது வந்து விடுகின்றேன் என  கூறி விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் குழந்தை வராததையடுத்து செல்வராணி  செல்வத்திடம்  சொல்லி இருக்கின்றார்.

அதன் பின்னரே தங்களை  ஏமாற்றி குழந்தையை விக்னேஷ் பிரபாவதி தம்பதி கடத்தி சென்று இருப்பதை அறிந்தனர்.இதனைடுத்து உடனடியாக  ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் தம்பதி  புகார் அளித்தனர். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக தனிப்படை  அமைத்து   விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது குழந்தையுடன் திருவாரூர் அருகே திருத்துறை  பூண்டியில்  தம்பதி இருப்பது தெரியவந்தது . இதனைடுத்து அங்கு சென்று குழந்தையை மீட்ட தனிப்படை போலீசார் குழந்தையை  கடத்திய தம்பதி விக்னேஷ் பிரபாவதி தம்பதியை கைது செய்தனர்.

குழந்தை இல்லாததால் செல்வம் செல்வராணியுடன் பழகி  திருப்பூரில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தவுடன் விக்னேஷ் பிரபாவதி தம்பதி குழந்தையை கடத்தி சென்றது முதல் கட்ட விசாரணையில்  தெரியவந்தது. இதனையடுத்து தம்பதியை கோவை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading