சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடுவதாக முதல்வர் அறிவிக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடுவதாக முதல்வர் அறிவிக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

8 வழிச்சாலை திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ”விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

  விவசாயிகளின் வாழ்வாதாரம், நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவான கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு எடுத்து வைக்கவில்லை. பாஜக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என வாதிட்டது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக பா.ஜ.க - அ.தி.மு.க அரசுகள் கூட்டணி வைத்துச் செயல்படுகின்றன. மக்கள் மன்றம் உரிய பாடத்தை வாக்குச் சீட்டு மூலம் கற்பிக்கும்.

  Also read: தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு - சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

  கமிஷன் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த காவல் துறையைப் பயன்படுத்தி விவசாயிகளின் மீது தடியடி நடத்தினார் முதலமைச்சர். மீண்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது. மத்திய அரசின் திட்டம் என்று சொல்லி தப்பித்துக்கொள்ள நினைக்காமல் கைவிட்டுவிட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும்’என்று குறிப்பிட்டுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published:

  சிறந்த கதைகள்