கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ஆள்கடல் மீன்பிடி விசைப்படகு ஒன்றை நாடு தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்தோனிசியா கடற்படையினர் பறிமுதல் செய்து, அதில் இருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேரையும் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த தூத்தூர் பகுதியை சேர்ந்த சஜு என்பவருக்கு சொந்தமான பிளசிங் என்ற விசைப்படகு தமிழக பதிவை கேன்சல் செய்து அந்தமானில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படகில் அந்தமான் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் பிப்ரவரி 28 ஆம் தேதி ஆழ்கடலில் 8 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் நேற்று (மார்ச் 8 ஆம் தேதி) மதியம் 12 மணி அளவில் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இந்தோனிசிய கடற்படையினர் குமரி மாவட்ட மீனவர்களின் படகை சுற்றிவளைத்தனர்.
பின்னர், படகில் இருந்த மேரி ஜஷிண்டோஸ் (34), இம்மானுவல் சோ (29), முட்னோப்பா (48), சிஜின் (29), பிரவின் (19), லிபின் (34), டோமன் (24)டோன்போசுகோ (48) ஆகிய 8 மீனவர்களையும் கைது செய்து இந்தோனேசியா துறைமுகப்பகுதிக்கு கொண்டு சென்று எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக அவர்கள் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Must Read : உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர் முதல்வர் ஸ்டாலினுக்கு உருக்கமான கோரிக்கை : தூதரகம் போதிய கவனம் செலுத்தவில்லை என கவலை
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.