Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 24-ம்தேதி முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

    தமிழ்நாட்டில் இன்று சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 24-ம்தேதி முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசனது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

    இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Rain

    அடுத்த செய்தி