ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம் அலெர்ட்

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம் அலெர்ட்

மழை

மழை

Weather Update | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 20-ம் தேதி கனமழைக்கு வாய்யப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரவித்துள்ளது.

இது தொடர்பாக சென்ன வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக  இன்று (டிசம்பர் 16) முதல் 18 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (டிசம்பர் 19) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Also Read : அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெற ஆதார் அவசியம் - தமிழக அரசு அதிரடி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் & தெற்கு வங்கக்கடல் பகுதிகள்: 16.12.2022 & 17.12.2022 : சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள்: 18.12.2022 முதல் 20.12.2022 வரை : சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Weather News in Tamil