மியான்மரில் சிக்கித் தவித்த சென்னை மீனவர்கள் 8 பேர் மீட்பு
மியான்மர் நாட்டில் இருந்து சென்னை காசி மேட்டைச் சேர்ந்த மீனவர்களை சிறப்பு விமானத்தில் டெல்லி அழைத்துவரப்பட்டு இன்று டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
- News18 Tamil
- Last Updated: October 8, 2020, 3:29 PM IST
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23-ம் தேதி ரகு, லட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்தி, கண்ணன், தேசப்பன், முருகன், எல். தேசப்பன் உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.அவர்கள் கரை திரும்பாததால் இந்திய கடலோர காவல்படையின் மூலம் அவர்களை தேடும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, மியான்மர் கடற்படையினரால் மீட்கப்பட்ட சென்னை மீனவர்கள், அந்நாட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில், பாபு என்ற மீனவர் படகின் அடியில் இருக்கும் இறக்கையில் சிக்கிய கயிறை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது கடலில் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மியான்மர் நாட்டில் உள்ள மீனவர்களை சிறப்பு விமானத்தில் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு தமிழக மீன்வளத் துறைஅதிகாரிகள் கடிதம் எழுதினார்.
கொரோனா பரவல் காரணமாக மியான்மர் நாட்டில் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக மீனவர்களை அழைத்து வரலாம் என்றால் பருவநிலை சாதமாக இல்லாத சூழல் நிலவி இருந்து. எனவே, மீனவர்களை சிறப்பு விமானத்தில் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கடிதம் எழுதினார்.மேலும் படிக்க...88-வது ஆண்டு விமானப்படை தினம் - வியத்தகு விமான அணிவகுப்பு
இதையடுத்து மியான்மர் நாட்டில் இருந்து சென்னை மீனவர்களை சிறப்பு விமானத்தில் நேற்று டெல்லி அழைத்து வந்தனர்.இன்று டெல்லி இருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடைந்தனர். இவர்களை தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார்.