திருச்சி விமான நிலையத்தில் 8.5 கிலோ தங்கம் பறிமுதல் - பசை வடிவில் மாற்றி நூதன முறையில் கடத்த முயற்சி

திருச்சி விமான நிலையத்தில் 8.5 கிலோ தங்கம் பறிமுதல் - பசை வடிவில் மாற்றி நூதன முறையில் கடத்த முயற்சி

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

துபாயிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 8 பயணிகளில் தங்கள் உடைகளிலும் உடைமைகளிலும் தங்கத்தை பசையாக மாற்றி கடத்தி வந்ததைக் கண்டறிந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
துபாயிலிருந்து வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலையத்தில் 4 .25 கோடி ரூபாய் மதிப்புள்ள 8.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையிலான சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு துணை இயக்குநர் சதீஷ் தலைமையிலான திருச்சி, கோவை குழுவினர் இணைந்து திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்த வந்த பயணிகளிடம்  சோதனை நடத்தினர்.

இதன்படி, துபாயிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 8 பயணிகளில் தங்கள் உடைகளிலும் உடைமைகளிலும் தங்கத்தை பசையாக மாற்றி கடத்தி வந்ததைக் கண்டறிந்தனர். அவர்களிடம் தங்க பசையாக சுமார் 10 கிலோவும் இதை உருக்கினால் வரும்  ₹ 4.25 கோடி மதிப்புள்ள 8.5 கிலோ தங்கம்  பறிமுதல் செய்தனர்.

Also read... ’காவல்துறை பாதுகாப்பு வேண்டாம், தனியார் பாதுகாப்பை வைத்துக்கொள்கிறேன்’ - நீதிமன்றத்தில் ஜெ.தீபா தகவல்..

பயணிகள் போல் வந்த கடத்தல்காரர்களிடம் மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவினர் தொடர்ப்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானப் போக்குவரத்து குறைந்துள்ள போதும் தங்க கடத்தல் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பசை வடிவத்தில் தங்கத்தை மாற்றி கடத்தி வருவது அதிகரித்துள்ளது. நகையாக, கட்டியாக கொண்டு வருவதை விட பசையாக கொண்டு வரும் போது கண்டுபிடிப்பது சிரமம் என்றும் கூறப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vinothini Aandisamy
First published: